"தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்" - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்ற டிஜிபியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது, ஆனால், இந்த அறிவிப்பு மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராது, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என கமல்ஹாசன் வற்புறுத்தியுள்ளார்.
சதிச்செயல்களுக்கு இரையாகாது விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதி, மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பு, கடமை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Comments